யூடியூப் கோ சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு!

யூடியூப் கோ சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு!
யூடியூப் கோ சேவையை நிறுத்த கூகுள் நிறுவனம் முடிவு!

யூடியூப் கோ (YouTube Go) சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது.

நாம் அனைவரும் பயன்படுத்து யூடியூப் சேவையில் இலகுரக மாற்றான (Light Version) "YouTube Go" சேவை பல ஆண்டுகளாக தேவையற்றதாகி விட்டதால், அந்த சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக தன் அதிகாரப் பூர்வப் பக்கத்தில் யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் கோ மோசமான இணையதள இணைப்பு மற்றும் குறைந்த விலை மொபைல் ஃபோன்களைக் கொண்ட பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக போதிய பயனர்கள் இல்லாதபோதிலும் தொடர்ந்து சேவையாற்றியது. இந்த நிலையில் யூடியூப் கோ சேவையை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இன்று, யூடியூப் கோ ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கிறோம். YouTubeஐ அணுகுவதற்கு, YouTube Go பயனர்கள் அதிகாரப்பூர்வ YouTube பயன்பாட்டை நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம் அல்லது அவர்களின் இணையதளங்கள் youtube.com ஐப் பார்வையிடவும். YouTube Go உடன் ஒப்பிடுகையில், அதிகாரப்பூர்வ YouTube பயன்பாடு சிறந்த ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தையும் வழங்குகிறது, மேலும் YouTube Goவில் இல்லாத கருத்துத் தெரிவிக்கும் திறன், இடுகையிடுதல், உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் டார்க்கைப் பயன்படுத்துதல் போன்ற பல அம்சங்களையும் வழங்குகிறது.

குறைந்த விலை மொபைல் ஃபோன்கள் அல்லது மெதுவான நெட்வொர்க்குகளில் YouTube ஐப் பார்க்கும் சாதனங்களுக்கான செயல்திறனை மேம்படுத்தியுள்ளோம்” என்று அதிகாரப்பூர்வ பதிவில் யூடியூப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறைந்த விலை போன்களுக்கான YouTube Go சேவை நிறுத்தப்பட உள்ளதால், குறைந்த விலை மற்றும் பட்ஜெட் ஃபோன்களை வேகமாக இயக்க அனுமதிக்கும் ஆண்ட்ராய்டின் மெலிந்த பதிப்பான ஆண்ட்ராய்டு கோவின் (Android Go) எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com