பாடகி பேகம் அக்தரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

பாடகி பேகம் அக்தரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்
பாடகி பேகம் அக்தரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்

கஜல் இசை பாடுவதில் தனக்கென தனி இடத்தை பெற்ற பிரபல பாடகி பேகம் அக்தரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் தன் முகப்பு பக்கத்தில் அவரின் முகம் பதித்த டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.  

1914-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ல் உத்தரப் பிரதேச மாநிலம் பாசியாபாத்தில் பிறந்தவர் பேகம் அக்தர். இவர் தனது ஏழு வயது முதல் புகழ்பெற்ற இசை கலைஞர்களிடம் இசைப்பயிற்சி பெற்றவர். தும்ரி, தாத்ரா, பூரப் மற்றும் பஞ்சா இசையை கலந்து பாடுவதில் இவருக்கு நிகர் எவருமில்லை. இவர் பாடும் கஜல் இசை மிகவும் பிரபலமானது. 

இன்று 103 வது பிறந்தநாள் கொண்டாடும் பேகம் அக்தரை நினைவூட்டும் வகையில் கூகுள் அவரின் முகம் பதித்த டூடுளை இன்று வெளியிட்டுள்ளது. பேகம் அக்தரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை மத்திய அரசு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com