இனி மொபைலில் ஃபோட்டோவை ஜிஃப் பைலாக எடுக்கலாம்

இனி மொபைலில் ஃபோட்டோவை ஜிஃப் பைலாக எடுக்கலாம்

இனி மொபைலில் ஃபோட்டோவை ஜிஃப் பைலாக எடுக்கலாம்
Published on

சாதாரண ஃபோட்டோக்களை எடுப்பதற்கு விடைகொடுக்க கூகுள் நிறுவனம் மோஷன் ஸ்டில்ஸ் என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய இளசுகள் ஸ்மார்ட்போனை கையில் வைத்துக் கொண்டு வலம் வருவதே புகைப்படங்கள் எடுக்க தான். சமூக வலைத்தளங்களில் வெளியிடும் செல்பி மற்றும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்காக செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பது இளைஞர்களுக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது.

இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் மோஷன் ஸ்டில்ஸ் என்ற அப்ளிகேஷன் மூலம் சாதாரண ஃபோட்டோக்களை தவிர்த்து, இனி ஜிஃப் படங்களாகவோ, வீடியோக்களாகவோ பதிவுசெய்யலாம். ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் மோஷன் ஸ்டில்ஸ் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து இந்த ஆப் பயன்படுத்தலாம். மொபைலில் மோஷன் ஸ்டில்ஸ் இன்ஸ்டால் செய்ததும் வழக்கமாக கேமரா மூலம் வீடியோ எடுப்பது போல காட்சிகளைப் பதிவுசெய்தால் போதும். அவற்றை ஜிஃப் அல்லது வீடியோவாக பகிர முடியும். லைவ் ஃபோட்டோவை கூட ஜிஃப் பைலாக நாம் அனுப்ப முடியும். சாதாரண ஃபோட்டோக்களைவிட இந்த ஜிஃப் பைல் இமேஜ் சுவாரஸ்யமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் சாதாரண ஃபோட்டோக்களை பகிர்வது போன்று இனி ஜிஃப் பைலாக பகிர முடியும். 

படங்களின் அளவைக் குறைப்பது, வாட்டர் மார்க் சேர்ப்பது போன்ற வசதிகளும் உள்ளன. இரண்டு மோஷன் ஸ்டில்களை இணைத்து ஒரே GIF அல்லது வீடியோவாக அனுப்பும் வசதியும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ராய்டு போன்களில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com