பயனர்களின் தகவல்களை திருடிய செயலிகள் - கூகுள் ப்ளே ஸ்டோரின் அதிரடி நடவடிக்கை

பயனர்களின் தகவல்களை திருடிய செயலிகள் - கூகுள் ப்ளே ஸ்டோரின் அதிரடி நடவடிக்கை
பயனர்களின் தகவல்களை திருடிய செயலிகள் - கூகுள் ப்ளே ஸ்டோரின் அதிரடி நடவடிக்கை

நீக்கப்பட்ட செயலிகளில் சில 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு செயலிகள், கேம்களை டவுன்லோட் செய்வதற்கு அதிக அளவில் கூகுள் ப்ளே ஸ்டோர் பயன்பட்டு வருகிறது. கூகுளின் அதிகாரப்பூர்வ தளம் என்பதால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் மட்டுமே இதில் இடம்பெறுகின்றன. இந்தநிலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில செயலிகள் பயனர்களின் செல்போன் எண் உள்ளிட்ட முக்கியமான  தகவல்களை சேகரித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட செயலிகள் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளன.

நீக்கப்பட்ட செயலிகளில் சில 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இப்போதுதான் கூகுள்  இந்த எல்லா செயலிகளையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இஸ்லாமிய பிராத்தனை செயலி, பார்கோடு ஸ்கேனிங் செயலி, நெடுஞ்சாலையில் வாகன வேகத்தை கண்டறியும் செயலி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள இந்த செயலிகள், துல்லியமான இருப்பிடத் தகவல், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்கள், அருகிலுள்ள டிவைஸ்  மற்றும் பாஸ்வேர்டுகளை சேகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் இருப்பிடம் சார்ந்து பயனர்களைக் கண்காணித்து வருகின்றன. கண்காணிப்புக்குப் பிறகு, பயனர்களின் தரவுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சேகரிக்கப்படுகிறது. இதில் முக்கியமாக பயனர்களின் பிரவுசர் ஹிஸ்ட்ரி சேமிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் தட்டச்சு செய்யும் பாஸ்வேர்டுகள் அனைத்து செயலிகள் மற்றும் தளங்களில் இருந்து கவரப்படுகிறது. இதனை சேமிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸ், தங்களின் தனிப்பட்ட சர்வருக்கும் அவற்றை அனுப்புகிறது. இந்த ஆப்ஸ் இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளின் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதையும்  படிக்க: லேட் நைட் இமெயிலுக்கு நோ ரிப்ளை! நோ எக்ஸ்ட்ரா வொர்க்! - மைக்ரோசாஃப்ட் சிஇஓ அதிரடி




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com