கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் இனி கடைசி 15 நிமிட தேடல் ஹிஸ்டரியை டெலீட் செய்யலாம்!

கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் இனி கடைசி 15 நிமிட தேடல் ஹிஸ்டரியை டெலீட் செய்யலாம்!
கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் இனி கடைசி 15 நிமிட தேடல் ஹிஸ்டரியை டெலீட் செய்யலாம்!

உலக அளவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் கடைசி 15 நிமிட தேடுதல் (Search) ஹிஸ்டரியை டெலீட் செய்யும் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளாதம். 

இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் ‘தி வெர்ஜ்’ தெரிவித்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் படிப்படியாக பயனர்களுக்கு ‘ரோல்-அவுட்’ (அறிமுகம்) செய்யப்பட்டு வருவதாகவும். வரும் நாட்களில் அனைத்து பயனர்களும் இதனை பயன்படுத்தலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளதாம். இது நிச்சயம் அனைத்து பயனர்களுக்கும் பயன் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அம்சம் ஒரு குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைத்துள்ளதா என்பதை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி தெரிந்து கொள்ளலாம். 

>பயனர்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். 

>அதில் புரோஃபைல் படத்தை க்ளிக் செய்து ‘Delete last 15 Min’ என்ற ஆப்ஷன் உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொள்ளலாம். இதனை தி வெர்ஜ் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com