‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்

‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்
‘விவேகம்’ அஜித்தின் ‘மோர்ஸ் கோட்’டை இனி ஐஃபோனில் பயன்படுத்தலாம்

கூகுள் நிறுவனம் iOS மென்பொருள் ஜி போர்ட்-இல் (G-Board)  மோர்ஸ் கோடை அறிமுகப்படுத்துகிறது. 

மோர்ஸ் கோட் 2 (Morse Code) என்றால் குறிப்பிட்ட தாளத்தைப் பயன்படுத்தி தகவலைப் பரிமாறிக்கொள்ளும் எழுத்துருக் குறியீட்டின் வகையாகும்.

இந்த டெக்னாலஜியை அஜீத் நடித்த விவேகம் படத்தில் இயக்குநர் சிவா பயன்படுத்தியிருந்தார். பெரும்பாலும் ராணுவம் போன்ற துறைகளில் தகவல்களை ரகசியமாக பரிமாறிக்கொள்ள மோர்ஸ் கோட் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. 

முதலில் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தின் ஜி போர்ட்-க்கு மோர்ஸ் கோடை வடிவமைத்த கூகுள் நிறுவனம் இப்போது iOS மென்பொருளில் அறிமுகப்படுத்துகிறது.

மோர்ஸ் கோட் ஆக்டிவேட் செய்யப்பட்டவுடன் கீபோர்ட் முழுவதும் டாட் மற்றும் டாஷ் ஐகான் தோன்றும். அதில் ஒவ்வொரு ஐகானை தொடும் பொழுதும் அதற்குறிய எழுத்து ஸ்கிரீனின் மேல் தோன்றும், இந்த மோர்ஸ் கோடை கற்றுக் கொள்வதற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேகமாக ‘மோர்ஸ் டைப்பிங்’ என்ற பயிற்சி விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் மோர்ஸ் கோட் டைப்பிங் பற்றி ஒரு மணி நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும். 

மோர்ஸ் கோட் டெக்னாலஜி உருவாக்கத்தின் போது கூகுள் நிறுவனத்துடன் பணியாற்றிய டெவலப்பர் கூறும்பேது “இப்போது பெரும்பாலான தொழில்நுட்பங்கள் பெருவாரியான மக்களுக்காகவே உருவாக்கப்படுவதால் குறைபாடுடன் உள்ள நபர்கள் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுகிறார்கள். ஆகையால் இந்த மோர்ஸ் கோட் போன்ற டெக்னாலஜிகள் முக்கியம்” என தெரிவித்தார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com