\
அசப்பில் ஐபோன் 13 போல இருக்கும் ஜியோனி ஜி13 புரோ சந்தையில் அறிமுகம்!

அசப்பில் ஐபோன் 13 போல இருக்கும் ஜியோனி ஜி13 புரோ சந்தையில் அறிமுகம்!

அசப்பில் ஐபோன் 13 போல இருக்கும் ஜியோனி ஜி13 புரோ சந்தையில் அறிமுகம்!
Published on

பார்க்க அசப்பில் ஐபோன் 13 மாடல் போன் போலவே தோற்றமளிக்கும் ஜியோனி ஜி13 புரோ என்ற ஸ்மார்ட்போனை சீன தேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஜியோனி நிறுவனம். கேமரா மற்றும் போனின் வடிவமைப்பு என அனைத்திலும் அப்படியே தேஜாவூ உணர்வை கொடுத்துள்ளது ஜியோனி. சீனாவில் ஐபோன்களுக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பினால் ஜியோனி மக்களை கவரும் வகையில் இதை செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

சிறப்பம்சங்கள்! 

6.26-இன்ச் ஃபுல் ஹெச்டி + எல்.சி.டி டிஸ்ப்ளே, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, Unisoc T310 சிப்செட், 4 ஜிபி ரேம், 32/128 ஜிபி ஸ்டோரேஜ், ரியர் சைடில் இரண்டு கேமரா, அதில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரைமரி கேமரா, 3500 mAh பேட்டரி, டைப் - சி சார்ஜ் போர்ட் இதில் இடம் பெற்றுள்ளது. 

நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் 83 மற்றும் 110 அமெரிக்க டாலர் விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது வருகிறதாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com