தயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…!

தயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…!

தயாராகுங்கள் ஸ்டார் வார்ஸ் மொபைல் ஃபோன் வந்தாச்சு…!
Published on

ஸ்மார்ட்ஃபோன் தாயாரிப்புகளில் தற்போது பலருக்கு பிடித்த பிராண்டாக இருப்பது ஒன் ப்ளஸ். இந்த மொபைலில் சமீபத்திய வரவு ஒன் ப்ள்ஸ் 5டி. 38 ஆயிரம் ரூபாய்க்கு தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் ஃபோனுக்கு மொபைல் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற காமிக் ஆன் 2017 விழாவில், ஒன் ப்ளஸ் 5டியின் தற்காலிக எடிசன் ஒன்றினை புகைப்படம் மற்றும் டீசரோடு அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதற்கு ஒன் ப்ளஸ் 5டி ஸ்டார் வார்ஸ் எடிசன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டார் வார்ஸ் பட ரசிகளுக்கு விருந்தாகவும், இளைஞர்களை கவரும் விதத்திலும் இந்த முயற்சியில் ஒன் ப்ள்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. கறுப்பு, வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் இந்த ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மொபைல் ஃபோனின் பின்புறம் ஸ்டார் வார்ஸ் என எழுதப்பட்டும், மொபைலை ஆன் செய்யும் பொழுது ஸ்டார்வார்ஸ் கதாப்பாத்திரத்தின் மாஸ்க் லோகோ வரும்படியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மொபைலின் உள்ளே நிறைய ஸ்டார் வார்ஸ் தீம் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.


ஒன் ப்ளஸ் 5டிக்கும், 5டி ஸ்டார் வார்ஸ்க்கும் உள்ள வேறுபாடு?

வசதிகளை பொருத்தவரை இரண்டும் ஒரே வசதிகளுடனே வெளிவந்துள்ளது. நிறங்களில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. 5டி ஸ்டார் வார்ஸ் வசதிகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி ஸ்டார் வார்ஸ் படத்தின் அடுத்த பாகமான ஸ்டார் வார்ஸ் தி லாஸ்ட் ஜெடி திரைக்கு வர இருக்கிறது. அதனை ப்ரோமோட் செய்யும் விதமாக அறிமுகமாகியுள்ள இந்த புதிய பதிப்பு படம் வெளியாவதற்கு முன்னதாகவே சந்தைக்கு வர இருப்பதாக என தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஸ்டார் வார்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஒன் ப்ளஸ் 5டி வசதிகள்:

ஒன்பிளஸ் 5டி ஸ்மார்ட் ஃபோன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவை முறையே ரூ.32,999 மற்றும் ரூ.37,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

6.01 இன்ச் மற்றும் 2106x1080 பிக்சல் 
4 ஜி, ப்ளூடூத், வைஃபை வசதிகள்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையோடு வடிவமைப்பு
6 ஜிபி / 8 ஜிபி ரேம் (இரண்டு வசதிகளில்)
64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி (இரண்டு வசதிகளில்)
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்  இயங்குதளம் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் செய்துக்கொள்ளும் வசதி 
16 எம்பி முதன்மை பிரைமரி கேமரா, 20 எம்பி  இரண்டாவதி பிரைமரி கேமரா (புகைப்படம் எடுக்க சிறப்பான வசதிகளில் உருவாக்கம்)
16 எம்பி செல்ஃபி கேமரா
ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர்
டூயல் சிம் பயன்படுத்திக்கொள்ளும் வசதி
2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
3300 எம்ஏஎச் பேட்டரி
டேஷ் சார்ஜ் செய்யும் வசதி (இந்த வகை சார்ஜர் மூலமாக வேகமாக மொபைலுக்கு சார்ஜ் செய்ய முடியும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com