மக்களவைத் தேர்தலை ஒட்டி பரப்புரை சூடுபிடித்து வரும் நிலையில், நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை வாகனமானது தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி பாஜக தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் கடந்த சில தினங்களாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்த அதிகாரிகள், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளார்களிடமிருந்து 4 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றினர். ஆனால், அந்த பணத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் மறுத்துவருகிறார்.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர தோதனைசெய்துவரும் நிலையில், இன்று தேர்தல் பரப்புரைக்காக சென்ற நயினார் நாகேந்திரனின் பிரச்சார வாகனம், கார் போன்றவற்றை சோதனையிட்டனர். இதில் பணமோ பொருளோ இல்லாதநிலையில் நயினார் நாகேந்திரனை தொடர்ந்து செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதிஅளித்தனர்