அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது சாம்சங் Galaxy Noteவகை மாடல்கள்..!

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது சாம்சங் Galaxy Noteவகை மாடல்கள்..!
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு.. இன்று வெளியாகிறது சாம்சங் Galaxy Noteவகை மாடல்கள்..!

Galaxy Noteவகை மாடல்களை சாம்சங் இன்று வெளியிட உள்ளது

இன்று மதியம் 12 மணிக்கு பவர்ஃபெஸ்ட் நிகழ்வு மூலம் Galaxy Noteவகை செல்போன்களை சாம்சங் இன்று வெளியிட உள்ளது. Galaxy Note20, Galaxy Note20 Ultra 5G ஆகிய இரண்டு வகை மாடல்கள் வெளியாக உள்ளன. இது ஆகஸ்ட் 28ம் தேதி விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது.

சாம்சங் Galaxy Note20 பின்புறம் 108எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பெரிஸ்கோப் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 10எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஸ் ஆகியவை உள்ளன. மேலும், 4300mAh பேட்டரி ,25W ஃபாஸ்ட் வயர்லெஸ் (WPC மற்றும் PMA) சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் போன்ற வசதிகள் உள்ளன

சாம்சங் Galaxy Note20 Ultra 5G ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி, 45W ஃபாஸ்ட் வயர்லெஸ் (WPC மற்றும் பிஎம்ஏ) சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர் ஆகிய வசதிகளை பெற்றுள்ளது. விலையைப் பொருத்தவரை Galaxy Note20 ரூ.75ஆயிரத்தில் இருந்து தொடங்குமென்றும், Galaxy Note20 Ultra 5G ரூ.97ஆயிரத்தில் இருந்தும் தொடங்குமென்றும் தெரிகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com