தனி அறையில் டி.வி. பார்க்கும் குழந்தைகள் குண்டாவார்கள்... ஆய்வில் தகவல்

தனி அறையில் டி.வி. பார்க்கும் குழந்தைகள் குண்டாவார்கள்... ஆய்வில் தகவல்

தனி அறையில் டி.வி. பார்க்கும் குழந்தைகள் குண்டாவார்கள்... ஆய்வில் தகவல்
Published on

தனி அறையில் டி.வி.பார்க்கும் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு எடை அதிகரிப்பு பிரச்னை ஏற்படும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தற்போது பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தனி படுக்கை அறை கொடுத்து அதில் டி.வி. வசதியும் செய்து கொடுக்கின்றனர். அதனால் தங்கள் அறை கதவை மூடிக் கொண்டு மணிக்கணக்கில் அவர்கள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்களுக்கு உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரி நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் 7 வயது சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்தது. அதே நேரத்தில் டி.வி. பார்க்காத 11 வயது சிறுமிகளுக்கு உடல் எடை அதிகரிக்கவில்லை.

அதே நேரத்தில் தனியாக அறையில் அமர்ந்து டி.வி. பார்க்கும் சிறுவர்களில் 20 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் சுதந்திரமாக டி.வி. பர்ப்பதால் அவர்களது உடல் எடையும், கொழுப்பும் அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com