ரஜினி முதல் யுவராஜ் வரை : நடப்பு ஆண்டில் NFT-யில் என்ட்ரி கொடுத்த இந்திய பிரபலங்கள்

ரஜினி முதல் யுவராஜ் வரை : நடப்பு ஆண்டில் NFT-யில் என்ட்ரி கொடுத்த இந்திய பிரபலங்கள்

ரஜினி முதல் யுவராஜ் வரை : நடப்பு ஆண்டில் NFT-யில் என்ட்ரி கொடுத்த இந்திய பிரபலங்கள்
Published on

2021-இல் பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமான ஒன்றுதான் NFT. Non-fungible token என்பதன் சுருக்கம்தான் இது. டிஜிட்டல் உலகில் தவிர்க்கமுடியாத ஒன்று. இதனை டிஜிட்டல் வடிவில் படைக்கப்பட்டுள்ள அல்லது சேகரிக்கப்பட்ட கலைபொருள் எனவும் சொல்லலாம். கிரிப்டோ கரன்சிகளுக்கு மத்தியில் புழங்குபவர்களுக்கு இது அதிகம் பரிச்சயமான ஒன்று. 

இத்தகைய சூழலில் 2021-இல் மட்டுமே NFT-யில் என்ட்ரி கொடுத்த இந்திய பிரபலங்கள் குறித்து பார்க்கலாம். 

அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சல்மான் கான், கமல்ஹாசன், சன்னி லியோன், மனிஷ் மல்ஹோத்ரா, சுனில் கவாஸ்கர், யுவராஜ் சிங் மாதிரியான பிரபலங்கள் NFT-யில் என்ட்ரி கொடுத்துள்ளனர். தங்களால் மறக்க முடியாத தருணங்கள், தங்களது புகைப்படம் மாதிரியானவற்றை இந்த பிரபலங்கள் NFT வடிவில் உருவாக்கி உள்ளனர். 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி படத்தின் 17 NFT சுமார் 99 முதல் 1500 அமெரிக்க டாலர்கள் வரையில் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூரை சேர்ந்த NFT தளமான Diginoor.io அந்த பணியை செய்திருந்தது. 

அதே போல யுவராஜ் சிங், தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்களை NFT வடிவில் Colexion தளத்திற்கு கொடுத்துள்ளார். Misfitz என்ற பெயரின் கீழ் சுமார் 9,600 NFT கலெக்ஷன்களை சேகரித்து வைத்துள்ளார் சன்னி லியோன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com