டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி?: கோவையில் மொபைல் கருத்தரங்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி?: கோவையில் மொபைல் கருத்தரங்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கையாள்வது எப்படி?: கோவையில் மொபைல் கருத்தரங்கம்
Published on

கோவையில் Fourth Dimension சார்பில் சார்பில் ‘தி ஃபெடரல்’ மற்றும் ‘தி ஹிந்து’ இணைந்து நடத்தும் 'மொபைல் மற்றும் டிஜிட்டல்' என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சியாக கணினியை பின்னுக்குத் தள்ளி ஒரு கைக்குள் அடங்கும் கருவியான மொபைல் ஃபோன்கள் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து அதன் பங்களிப்பை செலுத்தி வருகிறது. மொபைல் மற்றும் டிஜிட்டல் ஆகியவற்றின் தேவைகளை மக்கள், தொழில்துறை, வங்கி, பத்திரிகை என அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் அவற்றை முறையாக கையாளுவதும் இன்றியமையாததாக உள்ளது.

இச்சூழலில் மொபைல் மற்றும் டிஜிட்டல் குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்று வருகிறது. Fourth Dimension சார்பில் ‘தி ஃபெடரல்’ மற்றும் ‘தி ஹிந்து’இணைந்து இக்கருத்தரங்கை நடத்தி வருகிறது.
 
இந்த கருத்தரங்கில் மொபைல் மற்றும் டிஜிட்டல் தொடர்பான 6 தலைப்புகளில் தொழில்துறை, வங்கி, பத்திரிகை, ஊடகத்துறையை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆலோசனையும் நடத்தப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com