தரையில் இறங்கிய சந்திரயான் 3: அன்றே கணித்து பொருத்தமான பெயர் வைத்த வாஜ்பாய்!

’சந்திரயான்’ என்பதே பொருத்தமாக இருக்கும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.

விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், சந்திரயான் விண்கலத்துக்குப் பெயர் வந்தது எப்படி என்கிற கருத்துகள் இணையத்தில் தேடப்பட்டு வருகிறது.

சந்திரயான் என்பது இன்று நாடறிந்த பெயராக உள்ளது. நிலவை ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் இத்திட்டத்துக்கு முதலில் சோமயான் என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், ’சோமயான்’ என்பதைவிட ’சந்திரயான்’ என்பதே பொருத்தமாக இருக்கும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார். இதையடுத்து, ’சோமயான்’ என்ற பெயர் கைவிடப்பட்டு ’சந்திரயான்’ என்றே அழைக்கப்பட்டது.

இத்தகவலை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார். நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் திட்டம், முதன்முதலில் 1999ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com