விரைவில் வருகிறது பறக்கும் கார்...

விரைவில் வருகிறது பறக்கும் கார்...

விரைவில் வருகிறது பறக்கும் கார்...
Published on

நெதர்லாந்தைச் சேர்ந்த பிஏஎல்-வி (PAL-V) நிறுவனம் முதல் பறக்கும் காரினை 2018ல் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது.
 
பறக்கும் கார்களைத் தயாரிக்க உலகின் பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்து வரும் நிலையில், அந்த ரேஸில் நெதர்லாந்து நிறுவனம் வெற்றி பெற இருக்கிறது. ’பறக்கும் கார்கள் தொடர்பாக கடந்த 100 ஆண்டுகளாகவே மக்கள் கனவு கண்டுகொண்டிருந்தனர். விமானம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்த வாகனத்தை சாலைகளில் எப்படி ஓட்ட முடியும் என்பதே மக்கள் எழுப்பிய முதல் கேள்வி என்று பிஏஎல்-வி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை அதிகாரி மார்கஸ் ஹெஸ் தெரிவித்தார். நெதர்லாந்தின் ராம்ஸ்டான்க்ஸ்வீர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனம் முதல் பறக்கும் காரினை 2018ம் ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பறக்கும் காரினை வைத்திருக்கும் பயனாளர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் விமான ஓட்டுனர் உரிமம் ஆகிய 2 உரிமங்களையும் வைத்திருக்க வேண்டும். இந்த பறக்கும் காரினை டேக் ஆஃப் செய்ய சிறிய அளவிலான இடம் உங்களுக்குத் தேவைப்படும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். வீட்டு முன்பே இந்த வாகனத்தை தரையிறக்கிக் கொள்ள முடியும்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com