\
மோட்டோ சி பிளஸ்-க்கு ரூ.6500 வரை எக்சேஞ்ச்: ஃப்ளிப்கார்ட் அதிரடி

மோட்டோ சி பிளஸ்-க்கு ரூ.6500 வரை எக்சேஞ்ச்: ஃப்ளிப்கார்ட் அதிரடி

மோட்டோ சி பிளஸ்-க்கு ரூ.6500 வரை எக்சேஞ்ச்: ஃப்ளிப்கார்ட் அதிரடி
Published on


மோட்டோ சி பிளஸ் மொபைலுக்கு ரூபாய் 6500 வரை ஃப்ளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகை வழங்கியுள்ளது. இதனால் வெறும் 499 ரூபாய்-க்கே மோட்டோ சி பிளஸ் மொபைலை பெற முடியும்.

லெனோவோ நிறுவனம் கடந்த மாதத்தில் மோட்டோ சி பிளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்தேயமாக கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூபாய் 6,999. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு அதிரடி எக்ஸ்சேஞ்ச் சலுகையை  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூபாய் 6500 வரை வழங்கப்படும் எனவும், இதனால் வெறும் ரூபாய் 499-க்கு மோட்டோ சி பிளஸ் மொபைலை நீங்கள் பெறலாம் என ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது.

நீங்கள் எக்சேஞ்ச்-க்காக கொடுக்கும் ஸ்மாட்போனை பொறுத்து அதன் சலுகை விலை மாறுபடும். அதுமட்டுமின்றி எக்சேஞ்ச் மொபைலுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் 30ஜிபி 4ஜிபி டேட்டாவும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மோட்டோ சி பிளஸ்-ஸின் மூன்று நிற மாடல்களுக்குக்கும் இந்த எக்சேஞ்ச் சலுகை பொருந்தும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com