பேட்டரி இல்லா செல்போன்கள்... அமெரிக்க ஆய்வாளர்கள் அசத்தல்

பேட்டரி இல்லா செல்போன்கள்... அமெரிக்க ஆய்வாளர்கள் அசத்தல்

பேட்டரி இல்லா செல்போன்கள்... அமெரிக்க ஆய்வாளர்கள் அசத்தல்
Published on

உலகின் பேட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். 

ஸ்மார்ட்போன் உலகில் பெரும் சவாலாக இருப்பது பேட்டரி சார்ஜ்தான். அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பேட்டரிகளே இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் தற்போது வெற்றி கிட்டியுள்ளது. சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கால் பேசியும் அவர்கள் அசத்தியுள்ளனர்.  இதுதொடர்பாக பேசிய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஷ்யாம், மிகக் குறைவிலான ஆற்றலைப் பயன்படுத்தும் செல்போன்களை எங்களது குழுவினர் வடிவமைத்துள்ளனர். மக்களின் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட செல்போன்களுக்குத் தேவையான ஆற்றலை சுற்றுப்புறங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த புதிய செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக ரேடியோ அலைகளை அனுப்பும் பிரத்யேக மையங்கள் மூலம் செல்போன்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இன்கமிங், அவுட்கோயிங் கால்கள் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவற்றை குழுவினர் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். வணிகரீதியில் இந்த செல்போன் பயன்பாட்டுக்கு வரும்பொழுது வைஃபை அல்லது செல்போன் சேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசை ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com