QR CodeFreepik Model image
டெக்
கூகுள் QR Code மூலம் பெரிய அளவிலான கோப்புகளைகூட இணைய வசதி இல்லாமல் பகிரலாம்!
மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை QR கோடுகளை ஸ்கேன் செய்து செலுத்துவது போல இனி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.
மொபைல் அல்லது ஒரு வெப் லிங்க் மூலமாக பேமென்ட்களை QR கோடுகளை ஸ்கேன் செய்து செலுத்துவது போல இனி ஃபைல்களை டிரான்ஸ்ஃபர் செய்யலாம். அப்படி ஒரு வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இணைய வசதி இல்லை என்றாலும், வயர்லெஸ் முறையில் வீடியோ போன்ற பெரிய அளவிலான ஃபைல்களை கூட ஷேர் செய்யலாம்.
குயிக் ஷேர் மூலம், QR கோடுகளை ஸ்கேன் செய்து ஃபைல்களை ஷேர் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் ஃபைல்களை பாதுகாப்பான முறையில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.