இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வியூஸ்களை அள்ள ஹேக்கர்களை நாடும் பயனாளர்கள்?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வியூஸ்களை அள்ள ஹேக்கர்களை நாடும் பயனாளர்கள்?

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வியூஸ்களை அள்ள ஹேக்கர்களை நாடும் பயனாளர்கள்?
Published on

டிக் டாக் செயலிக்கு மாற்றாக கடந்த 5 ஆம் தேதி இன்ஸ்டாகிராமின் புதிய ஷார்ட்  வீடியோ  ‘ரீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய ஷார்ட் வீடியோக்களை உருவாக்கி அதை இன்ஸ்டாகிராமில் பகிரலாம்.

அப்படி பகிரப்படும் வீடியோக்களுக்கு அதிகளவிலான வியூஸ், ஷேர்ஸ் மட்டும் லைக்ஸ் கிடைத்தால் அந்த வீடியோவை அப்லோட் செய்கின்ற பயனருக்கு சன்மானம் கொடுக்கப்படும் எனவும் சொல்லப்பட்டது. 

இதனையடுத்து இணைய வாசிகள் பலரும் போட்டி போட்டு வீடியோக்களை ‘ரீல்ஸ்’ பிளாட்பார்மில் பகிர்ந்து வரும் சூழலில் சில பயனர்கள் அந்த வீடியோக்களை கொண்டு பணம் சம்பாதிக்கின்ற நோக்கில் போலியாக வியூஸ், ஷேர்ஸ் மற்றும் லைக்ஸை போலியாக உருவாக்க ஹேக்கர்களுக்கு பணம் கொடுத்து மோசடியில் ஈடுபடுவதாகவும் டெக்னலாஜி செய்திகளை வெளியிடும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மக்களிடையே ரீல்ஸ் பிளாட்பார்மை பிராண்ட் செய்யவும் போலியான வியூஸ்கள் உருவாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்காக பயனர்கள் பாட்நெட் மேனேஜர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக ஒரு குறிப்பிட்ட வீடியோவுக்கு வியூஸ், ஷேர்ஸ் மற்றும் லைக்ஸ் கிடைக்க பணம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மோசடிகள் அனைத்தும் போலியான கணக்குகள் மூலமாக நடத்தப்படுவதாகவும் விவரித்துள்ளார் பாட்நெட் மேனேஜர் ஒருவர். 

‘போலி கணக்குகளை தொடர்ந்து முடக்குவதற்கான வேலைகளை செய்து வருவதாவும். இது எங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் நம்பகத்தன்மையற்ற தகவல்’ எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது இன்ஸ்ட்டாகிராமின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com