லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி

லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி

லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடு - ஃபேஸ்புக் கெடுபிடி
Published on

ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில், நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர், தாக்குதல் சம்பவத்தை தனது ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது வரை லைவ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் லைவ்வை அந்த நேரத்தில் 200 பேர் மட்டுமே பார்த்தனர். மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4 ஆயிரம் முறை மட்டுமே பார்க்கப்பட்டது. உடனடியாக ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து ரிப்போர்ட் செய்தவுடன் வீடியோவை உடனடியாக நீக்கப்பட்டது.

ஆனாலும் பல தளங்களிலும் அந்த வீடியோ பரவியதாகவும், அதனை தடுக்க பேஸ்புக் தவறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் லைவ் செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கொடூரமான படங்கள், வீடியோ பகிரப்படுவதை தடுக்கும் வகையிலும், ஃபேஸ்புக் விதிகளை மீறியவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியை தடுப்பது உள்ளிட்ட வகையிலும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வர பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com