பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?

பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?

பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?
Published on
ஃபேஸ்புக் பெயரை மாற்றுவதற்கு, தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட உள்ளதாக 'தி வேர்ஜ்' செய்தி வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 
ஃபேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில், மற்ற சமூக வலைத்தளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளை நிறுவனமாக மாறும். ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com