வாட்ஸ்அப், மெசேஞ்சர், இன்ஸ்டா மூன்றும் சேர்த்து ஒன்னா ! புதிய திட்டம்

வாட்ஸ்அப், மெசேஞ்சர், இன்ஸ்டா மூன்றும் சேர்த்து ஒன்னா ! புதிய திட்டம்

வாட்ஸ்அப், மெசேஞ்சர், இன்ஸ்டா மூன்றும் சேர்த்து ஒன்னா ! புதிய திட்டம்
Published on

வாட்ஸ் அப், பேஸ்புக்கின் மெசேஞ்சர் , இன்ஸ்டா ஆகிய மூன்றையும் இணைத்தவாறு மற்றொருவர்களுடன் சேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். சமூக வலைதளங்களில் கிங்காக பேஸ்புக் உள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தகவல் பரிமாற்றம் என்று பார்த்தால் வாட்ஸ் அப். அந்த செயலியும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது தான். அதாவது மார்க் ஷூக்கர்பெர்க்குக்கு சொந்தமான நிறுவனத்தை கடக்காமல் நம்முடைய ஒரு நாளை ஸ்மார்ட் போனில் கடத்த முடியாது என்பது தான் இன்றைய நிலைமை. 

இப்படி இருக்க, நாளுக்கு நாள் பயனாளர்களுக்கு தேவையான விஷயத்தை கொடுப்பதிலும், பயனாளர்களை கவர்வதிலும் பேஸ்புக் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. பயனாளர்களை தங்கள் நிறுவனத்துடன் மேலும் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பதே புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்படுவதன் நோக்கம். இந்நிலையில் தங்களுடைய மூன்று முக்கிய சேவைகளையும் ஒன்றிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது வாட்ஸ் அப், பேஸ்புக்கின் மெசேஞ்சர், இன்ஸ்டா ஆகிய மூன்றையும் இணைத்தவாறு மற்றொருவர்களுடன் சேட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படி மூன்றும் இணைக்கப்படுவதால் பயனாளர்கள் மூன்று தளத்துடன் இணைந்திருப்பார்கள் என்று பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

அப்படி என்றால் பேஸ்புக்கில் இல்லாத ஒருவர் உங்கள் வாட்ஸ் அப்பில் இருந்தால், நீங்கள் வாட்ஸ் அப் செயலிக்கு போகாமலேயே உங்கள் பேஸ்புக் கணக்கு மூலம் அவருடன் சேட் செய்யலாம். இப்படியாக மூன்று தளமும் இணைக்கப்படும். 

இந்த சேவையில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அதற்கான வேலையில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படலாம் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com