“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்

“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்

“வாட்ஸ்அப் போல ஃபேஸ்புக் மெசேஜை டெலிட் செய்யலாம்” - புதிய அப்டேட்
Published on

வாட்ஸ்அப்-பில் தவறுதாலக அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது போல ஃபேஸ்புக்கிலும் புதிய அப்டேட் வரவுள்ளது.

வாட்ஸ்அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக அது உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன. முதலில் எழுத்தால் வைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பின்னர் புகைப்படமாகவும், தற்போது வீடியோவாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பணம் அனுப்புவது உள்ளிட்ட அப்டேட்களும் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பிவிட்டாலோ அல்லது தவறுதலான ஒரு குரூப்பில் மெசேஜை அனுப்பிவிட்டாலோ, அதை டெலிட் (நீக்கம்) செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. இதனை மாற்றி கடந்த டிசம்பர் மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதன்படி ஒரு மெசேஜை தவறுதலாக அனுப்பிவிட்டால் அதை 7 நிமிடத்திற்குள் டெலிட் செய்யலாம் என்ற வசதி வழங்கப்பட்டது. இதற்கு வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்க, பின்னர் அது ஒரு மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் அப் போலவே ஃபேஸ்புக்கின் மெசேஜ் அப்ளிகேஷனான மெசேஞ்சரிலும் புதிய அப்டேட் வரவுள்ளது. இதன்படி மெசேஞ்சர் அப் அல்லது ஃபேஸ்புக் மூலம் யாருக்காவது தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால் டெலி செய்ய முடியும். ஆனால் 10 நிமிடத்திற்குள் அதை டெலிட் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கொண்டுவரப்படும் அப்டேட் என்பதால் இது 10 நிமிடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர் பயன்பாட்டாளர்களின் வரவேற்பை பொறுத்து இந்த நேரம் நீட்டிக்கப்படலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com