விரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்!

விரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்!
விரைவில் மெசேஞ்சர் மூலம் இன்ஸ்டா மெசேஜ்!
Published on

இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பும் வசதியை அதன் சொந்த செய்தி தளமான மெசேஞ்சருடன் ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் இணையதளத்தை நாள்தோறும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமும் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டா ஆகிய இரண்டிலும் நண்பர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளது. ஃபேஸ்புக்கை பொறுத்தவரை மெசேஞ்சர் செயலி மூலம் மெசேஜ் அனுப்பும் வசதி நடைமுறையில் உள்ளது. மெசேஞ்சர் செயலியில் வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் வசதியும் உள்ளது. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பும் வசதியை அதன் சொந்த செய்தி தளமான மெசேஞ்சருடன் ஒருங்கிணைக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் பேஸ்புக் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்டால் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது மற்ற சமூக வலைதளங்களான இன்ஸ்டா மற்றும் வாட்ஸ் அப்பை இணைப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பயனாளர்களை தங்கள் நிறுவனத்துடன் இணைப்பிலேயே வைத்திருக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com