டெக்
கணினி குறியீட்டை திருடியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு...!
கணினி குறியீட்டை திருடியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு...!
சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஆக்குலஸ் என்ற நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியது. ஸெனிமேக்ஸ் என்ற வீடியோ கேம் தயாரிக்கும் நிறுவனம் தங்களுடைய சொந்த மெய் நிகர் ஹெட்செட்களை வெளியிடுவதற்கு வைத்திருந்த கணினி குறியீடுகளை ஆக்குலஸ் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காத ஆக்குலஸ் நிறுவனம் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.