பேஸ்புக்-கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் புது தகவல்

பேஸ்புக்-கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் புது தகவல்

பேஸ்புக்-கின் நம்பகத்தன்மை எப்படி? ஆய்வில் புது தகவல்
Published on

நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிக்கிறது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். இது இல்லாமல் முடியாது என்கிற அளவுக்கு பலர் இதற்கு அடிமையாகியும் உள்ளனர். இந்த பேஸ்புக்ள பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக, சில மாதங்களுக்கு புகார் எழுந்தது. இதில் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை அனாலிட்டிக்கா நிறுவனம் திருடியதாக ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், அதற்காக மன்னிப்பும் கோரியது. 

இந்நிலையில் நம்பகத்தன்மை குறைந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஃபேஸ்புக் முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டோலுனா (TOLUNA) என்ற நிறுவனம் ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் 40 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக் நம்பகத்தன்மையற்ற நிறுவனம் என தெரிவித்துள்ளனர். 

பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் அந்நிறுவனத்தின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கைத் தொடர்ந்து ட்விட்டர், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com