Nearby Friends வசதியை நிறுத்தும் ஃபேஸ்புக்!

Nearby Friends வசதியை நிறுத்தும் ஃபேஸ்புக்!

Nearby Friends வசதியை நிறுத்தும் ஃபேஸ்புக்!
Published on

அருகே இருக்கும் நண்பர் யார் என்பதை தெரிவிக்கும் வசதியை வருகிற 31 ஆம் தேதி முதல் நிறுத்துவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் செயலியில் Nearby Friends எனப்படும் அருகே இருக்கும் நண்பர் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதி கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் நண்பரின் உண்மையான நேர இருப்பிடத்தைக் கண்காணிக்க இயலும். செயலி இயக்கப்பட்டதும், பயனர்கள் தங்கள் நண்பர்கள் தற்போதைய இருப்பிடத்தின் அருகாமையில் இருக்கும்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த வசதியை வருகிற 31-ஆம் தேதி முதல் நிறுத்துவதாக ஃபேஸ்புக்கை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இதேபோல, வானிலை முன்னறிவிப்பு, பயனாளர் சென்றுவந்த இடங்கள் குறித்த விவரங்களும் நிறுத்தப்படும் எனத் மெட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com