“பயன்பாட்டாளர்களின் தகவல்களை விற்கவில்லை” - ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்
ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை எப்போதும் தங்கள் நிறுவனம் விற்கவில்லை என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு அடுத்த மாதத்தோடு 15 வருடங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில் தங்கள் நிறுவனம் தொடர்பாக பேசிய மார்க், பயன்பாட்டாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ற சேவையை ஃபேஸ்புக் வழங்குகிறது.
ஃபேஸ்புக்கில் உள்ள ஜங்குகள் மற்றும் பழைய டேட்டாக்கள் எளிதில் சமாளித்துவிடாலம் என எண்ணினோம். ஆனால் அது எங்களுக்கு பெரும் சுமையாக மாறியது. குறிப்பாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் 2 பில்லியனுக்கும் மேலான பதிவாளர்களின் டேட்டாக்களை பராமரிக்க ஒரு தனி குழுவையே நியமிக்கும் நிலை வந்தது. தற்போது அந்தத் தகவல்கள் மிகவும் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான, அவர்கள் விரும்பி கிளிக் செய்வதை வகைப்படுத்தியுள்ளோம். அவற்றின் கீழ் தான் விளம்பரங்கள் ஒளிப்பரப்படுகின்றன. நாங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை விற்பதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவை சில சிக்கல்களை எங்கள் நிறுவனத்திற்கு கொடுத்தாலும், எங்கள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டுதான் இருந்தது.
பயனீட்டாளர்கள் அதிகம் பகிர்வதையே நாங்கள் அவர்களுக்கு விளம்பரமாக ஒளிபரப்புகிறோம். அதேபோன்று தகாத வீடியோக்கள் மற்றும் ஆபாசமானவைகளை தடுப்பதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவையற்ற பதிவுகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விருப்பம் இல்லாத விளம்பரங்களை தடை செய்ய பயனீட்டாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.