திருட்டு வீடியோக்களை கண்டு பிடிக்கும் ஃபேஸ்புக்

திருட்டு வீடியோக்களை கண்டு பிடிக்கும் ஃபேஸ்புக்

திருட்டு வீடியோக்களை கண்டு பிடிக்கும் ஃபேஸ்புக்
Published on

ஃபேஸ்புக்கில் திருட்டு வீடியோக்களை பதிவேற்றம் செய்வதைத் தடுக்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கையாள உள்ளது.

ஃபேஸ்புக்கில் ஏதாவது ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தால் அதை மற்றொருவர் திருடி தனது வீடியோ போல பதிவேற்றம் செய்துவிடுகிறார் என்ற புகார் அடிக்கடி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு வந்தது.

ஃபேஸ்புக்கில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் எந்த வீடியோக்களை வேண்டுமானாலும் பதிவேற்றம் செய்யலாம். இதனால் வேறு நபர்களின் வீடியோக்களை அனுமதியில்லாமல் பதிவேற்றம் செய்வது அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் சோர்ஸ்3 எனும் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

சோர்ஸ்3 நிறுவனமானது தனது இணையத்தளத்தின் மூலமாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் ஒரிஜினல் பதிப்புக்கள் எங்கிருந்து பெற்றவை என்பதை காட்டுகிறது. மேலும் திருடப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட கணினியின் ஐபி முகவரியையும் காட்டிக்கொடுக்கிறது. சோர்ஸ்3 உடன் ஃபேஸ்புக் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வீடியோவை விரைவாகவும் துல்லியமாகவும் அடையாளம் காண வீடியோ மேட்சிங் டூல் எனும் முறையை அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com