ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமானம்: சோதனை வெற்றி..!

ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமானம்: சோதனை வெற்றி..!

ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமானம்: சோதனை வெற்றி..!
Published on

உலகம் முழுவதும், தொலை தூரத்திற்கும் இணைய சேவை அளிக்கும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் ஆளில்லா விமானத்தை வானில் நிலைநிறுத்தி வெற்றி பெற்றுள்ளது.

'அக்யூலா' என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம் அரிசோனா நகரில் 106 நிமிடங்கள் வானில் பறந்தது, ஃபேஸ்புக் நிறுவனத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது. 60,000 அடி உயரத்தில் பறக்க விட வேண்டும் என்பது ஃபேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தாலும், 3000 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது.  நினைத்த இலக்கு மற்றும் உயரத்தில் பறக்கவில்லையென்றாலும், சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூரிய ஒளி மூலமாக இயங்கும் இந்த ஆளில்லா விமானம், பல மாதங்களுக்கு வானில் நிலை நிறுத்தப்பட்டு லேசர் மூலமாக ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வெற்றிகரமான இந்த அக்யூலா சோதனை, கடந்த மே மாதம் செயல்படுத்தப்பட்டது என்றாலும் ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதுதான் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடைபெற்ற முதல் சோதனை தோல்வி அடைந்ததால், இந்த விமான சோதனை ஓட்டத்தை தாமதமாக தெரிவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த வருடம் ஏற்பட்ட சோதனைத் தோல்வி, இந்தமுறை ஏற்படாமல் இருக்க ஃபேஸ்புக் தொழில்நுட்ப குழுவினர், சிறப்பு மென்பொருள்களை பயன்படுத்தியுள்ளனர். இதனால், இரண்டாவது முறையும் தோல்வி ஏற்படாமல் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

போயிங் 737 விமானத்தின் இறக்கைகளின் நீளத்தைப் போன்று 'அக்யூலா' ஆளில்லா விமானத்தின் இறக்கையும் நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இணைய சேவை அளிக்க வேண்டும் என்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் குறிக்கோள் நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது, ஃபேஸ்புக்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com