மியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

மியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்
மியான்மர் ராணுவத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

ஃபேஸ்புக் நிறுவனம் மியான்மர் ராணுவத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளத்தை நீக்கியுள்ளது. சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மியான்மர் போலீசார் இரண்டு பேரை சுட்டுக் கொன்றுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

“எங்களது உலகளாவிய கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டு Tatmadaw True News Information Team பக்கத்தை நீக்கியுள்ளோம். சமூகத் தரநிலைகள் வன்முறையைத் தூண்டுவதைத் தடைசெய்கின்ற நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். 

மியான்மர் ராணுவத்தை Tatmadaw என சொல்வது வழக்கம். கடந்த 2018இல் மியான்மர் ராணுவத்  தலைவர்  Min Aung Hlaing பக்கத்தையும் ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் அங்கு தேர்தல் நடைபெற்ற போதும் இதுமாதிரியான நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com