இறப்பை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - ஃபேஸ்புக்குக்கு கோரிக்கை விடுத்த நபர்.!

இறப்பை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - ஃபேஸ்புக்குக்கு கோரிக்கை விடுத்த நபர்.!

இறப்பை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் - ஃபேஸ்புக்குக்கு கோரிக்கை விடுத்த நபர்.!
Published on

தன்னுடைய இறப்பை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த நபரின் வேண்டுகோளை ஃபேஸ்புக் நிராகரித்துள்ளது

பிரான்ஸைச் சேர்ந்த அலைன் கோக் (57) என்ற நபர் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அந்நாட்டின் பிரதமருக்கு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில், தன்னை கருணைக்கொலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அரசு அதனை நிராகரித்துள்ளது. இதனை அடுத்து அவர் உணவு, மருந்து எதுவும் எடுக்காமல் போராட்டம் செய்துள்ளார். மேலும் தன்னுடைய இறப்பை பலரும் நேரலையில் பார்க்க வேண்டுமென ஃபேஸ்புக்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய வேண்டுகோளை ஃபேஸ்புக் நிராகரித்துவிட்டது. ‘ விடுதலையின் பாதை தொடங்குகிறது, என்னை நம்புங்கள், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்ற தலைப்புடன் தன்னை அவர் நேரலையில் வைத்துக்கொண்டார். ஆனால் இதற்கு ஃபேஸ்புக் தடை விதித்தது. எங்களின் விதிகளின்படி யாருடைய தற்கொலையையும் ஒளிபரப்பு செய்ய முடியாது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

அவருடைய வீடியோவை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது. மேலும் அலைன் கோக்கிற்கு விளக்கம் அளித்துள்ள அந்நாட்டு அரசு உங்களை அழித்துகொள்ள நம் நாட்டு அரசின் விதி அனுமதிக்காது என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com