உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவை !

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவை !

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் சேவை !
Published on

உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற செயலிகளின் சேவை சில பயனாளர்களுக்கு தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக். பயனாளர்கள் அதிகாலை கண் விழிப்பதும் இரவு தூங்கும் போது கடைசியாக பார்த்துவிட்டு தூங்குவதும் பேஸ்புக்கைத்தான் என்ற நிலைமைதான் தற்போது. பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி வியாபாரம், தேர்தல் பிரசாரம் என வணிக ரீதியிலாகவும் பேஸ்புக் இயங்கி வருகிறது. 

செய்திகள், பிரச்சாரம், வியாபாரங்கள், விளம்பரங்கள் என எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக பேஸ்புக் உள்ளது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரை , அதே போல் சிறிய மன்றங்கள் முதல் பெரிய தேசிய கட்சிகள் வரை பேஸ்புக்கை பெரிய சக்தியாக நினைக்கின்றன. 

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ் அப் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், புதிய பதிவுகளை பதிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க மு‌யற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் என்றும் இது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

பேஸ்பு,க், இன்ஸ்டாவில் பிரச்னை என்றதும் டிவிட்டர் பக்கம் குவிந்துள்ள இணையவாசிகள் #instagramdown, #FacebookDown என்ற ஹேஸ்டேக்குகளில் கருத்துகளை தெரிவித்தும், கிண்டல்செய்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com