உக்ரைன் போர் எதிரொலி: செவ்வாய் கிரக திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமை புதிய முடிவு

உக்ரைன் போர் எதிரொலி: செவ்வாய் கிரக திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமை புதிய முடிவு
உக்ரைன் போர் எதிரொலி: செவ்வாய் கிரக திட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமை புதிய முடிவு

உக்ரைன் மீது இடைவிடாது போரை தொடர்ந்த வண்ணம் உள்ளது ரஷ்யா. போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த அனைத்து முயற்சியும் வீணாகியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் ரஷ்யா செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிக்காக ரோவரை அனுப்பும் முயற்சியை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது ஐரோப்பிய விண்வெளி முகமை. 

அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை அறியும் வகையில் அங்குள்ள மண்ணை துளையிட்டு ஆராய்ச்சி மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை ஏவும் பணி வரும் செப்டம்பர் வாக்கில் நடைபெற இருந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டது. 

“உக்ரைன் மண்ணில் ரஷ்ய படைகள் படையெடுத்துள்ள காரணத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், வலிகள் மற்றும் போரினால் ஏற்பட்டுள்ள அதிர்வலைகளுக்கு நாங்கள் வருந்துகிறோம். எங்கள் உறுப்பினர்களுடன் கலந்து பேசிய நிலையில் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். நெருக்கடி மிக்க தருணத்தில் நாங்கள் மேற்கொண்டுள்ள முக்கியமான முடிவு இது. ரஷ்யாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிக்காக ExoMars ரோவரை அனுப்பும் முயற்சியை நிறுத்தி வைக்கிறோம்” என ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com