‘இது மனித நேயத்திற்கு ஆதரவாக இருக்கும்..’ புதிய AI நிறுவனத்தை தொடங்கிய எலான் மஸ்க்!

ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் சாட்ஜிபிடி-க்கு போட்டியாக, xAI என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்.
Elon Musk
Elon MuskTwitter

டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் xAI என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஆபத்து குறித்து பல முறை பேசியுள்ள எலான் மஸ்க், தான் தொடங்கியிருக்கும் xAI நிறுவனத்தின் குறிக்கோளாக 'பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்வது' என்பதை வைத்துள்ளார்.

இது குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் ‘The goal of xAI is to understand the true nature of the universe’ என குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் ஓபன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களில் பெரும் அனுபவம் கொண்ட பொறியாளர்களின் குழுவைக் கொண்டுள்ளது. xAI நாளை (ஜூலை 14) Twitter Spaces அரட்டையை நடத்த உள்ளது.

 Elon Musk
Elon Musk File Photo

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இப்போது உலகை ஆட்டிப்படைக்கும் ஓபன் ஏஐ உருவாக்கத்தில் ஏற்கெனவே இருந்தவர் எலான் மஸ்க். ஓபன் ஏஐ-யில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும். ஆனால் ஓபன் ஏஐ நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வசம் சென்றதைத் தொடர்ந்து, எங்களின் நோக்கம் இதுவல்ல என்றும் ஓபன் ஏஐ லாப நோக்கமற்று இருக்க வேண்டும் என்றும் கருத்தை முன்வைத்துவிட்டு அதன் தொழில்நுட்ப உருவாக்கக் குழுவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறினார்.

அதன்பின் மீண்டும் ஏஐ துறைக்குள் நுழைய முடிவு செய்த எலான் மஸ்க் தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் சந்தித்து உரையாடி வந்தார். செயற்கை நுண்ணறிவு துறையில் கால்பதிக்கும் முன்னோட்டமாக 'TruthGPT' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினார். இறுதியாக தற்போது ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ChatGPT-க்கு போட்டியாக, xAI நிறுவனத்தை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.

 Elon Musk
Elon Musk

பிரபஞ்சத்தின் அடிப்படை இயல்பை ஆழமாகப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் மூலம், அது இயற்கையாகவே மனித குலத்திற்கு நன்மையளிக்கும் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று நம்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் “ஏஐ பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து நான் கொண்டு வரக்கூடிய சிறந்த விஷயம், xAI பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் என்பதுதான். இது மனித நேயத்திற்கு ஆதரவாக (Pro-Humanity) இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று மஸ்க் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com