No hashtags நோக்கி செல்லும் எக்ஸ் தளம்? எலான் மஸ்க்கின் திட்டம் என்ன?
எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் இடுகைகள் தேவையில்லாதது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இனி சிஸ்டத்துக்கு ஹேஷ்டேக்குகள் தேவையில்லை என்றும் அவை பார்க்க சிறப்பாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தளத்தில் என்ன ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு வேறு ஏதும் வழியை எலான் மஸ்க் உருவாக்கியிருக்கலாம் என்று இணைய வல்லுநர்கள் கூறுகின்றனர்.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த ட்விட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றிய மஸ்க், பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து, செயலியின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களை கொண்டு வந்தார். வீடியோ அழைப்புகள், AI சாட்போட் GORK உள்ளிட்ட அம்சங்களை எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த GORK-யிடம், பயனர் ஒருவர் ‘எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் பயன்படுத்தலாமா?’ என கேள்வி கேட்டு, பதிலை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதை ரீ-ட்வீட் செய்துள்ள மஸ்க், “தயவுசெய்து ஹேஷ்டேக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். இனி சிஸ்டத்துக்கு ஹேஷ்டேக்குகள் தேவையில்லை. அவை பார்க்கவும் சிறப்பாக இல்லை” என்றுள்ளார்.