"நடராஜாசனா, விருக்ஷாசனா என ஆசனங்களை செய்கிறது".. எலான் மஸ்க் உருவாக்கிய மனிதவடிவிலான ரோபோ!

இந்த ரோபோ நமஸ்தே என்று நமக்கு வணக்கம் வைக்கிறது, நடராஜாசனா, விருக்ஷாசனா என இரண்டு ஆசனங்களையும் செய்து அசத்துகிறது.
roobart
roobartNGMPC22 - 147

டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க், மனிதவடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில் இந்தியன் கனெக்ட்டும் இருக்கிறது. என்னவென்று பார்க்கலாம்.

டெஸ்லா பாட் ( TESLA BOT ) என்று பெயரிடப்பட்டுள்ள மஸ்க்கின் மனிதவடிவ ரோபோவின் செயல்பாடுகளை டெஸ்லா தனது தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட அனைத்தும் மனிதவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ நமஸ்தே என்று நமக்கு வணக்கம் வைக்கிறது, நடராஜாசனா, விருக்ஷாசனா என இரண்டு ஆசனங்களையும் செய்து அசத்துகிறது. இதன் கைகளில் உணர்நுட்பங்கள் இருப்பதால் சரியாக பொருட்களை கையாள்கிறது. இடையில் யாரும் புகுந்து ரோபோவின் வேலையில் குறுக்கீடு செய்தாலும் அதனை விரைந்து சரிசெய்து, தனது வேலையை அந்த ரோபோ செய்கிறது.

2021 ஆம் ஆண்டு டெஸ்லாவின் செயற்கை நுண்ணறிவு தினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரோபோ TESLA BOT அல்லது TESLA OPTIMUS என்றழைக்கப்படுகிறது. 5 அடி 8 அங்குலம் கொண்ட இந்த ரோபோ, 56 கிலோ எடை கொண்டது.

NGMPC22 - 147

மனிதர்கள் மோசமான, ஒரேவிதமான, சலித்துப்போகும் வேலைகள் செய்வதை தவிர்க்கவே இந்த ரோபோவை அறிமுகம் செய்வதாக கூறியிருக்கிறார் எலான் மஸ்க். மிகவும் பயனளிக்கும் வகையில், காரை விட விலை குறைந்த மனி தவடிவ ரோபோவை கொண்டுவருவதே தனது நோக்கம் என்று முன்னதாக மஸ்க் கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com