டிக்-டாக் ரிட்டர்ன்ஸ்? தடையை நீக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக தகவல்

டிக்-டாக் ரிட்டர்ன்ஸ்? தடையை நீக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக தகவல்
டிக்-டாக் ரிட்டர்ன்ஸ்? தடையை நீக்க இந்திய அரசுடன் பேசி வருவதாக தகவல்

இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த 2020 செப்டம்பரில் தடை விதித்தது இந்திய அரசு. அதில் டிக்-டாக் அப்ளிகேஷனும் முடக்கப்பட்டது. இந்நிலையில் அதன் டெவலப்பரான பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்-டாக் அப்ளிகேஷனை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ‘தி பிரிண்ட்’ நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. நிச்சயம் டிக்-டாக் அப்ளிகேஷனுக்கான தடை நீக்கப்படும் என பைட்டேன்ஸ் எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சமூக ஊடக நெறிமுறைகளை பின்பற்ற டிக்-டாக் தயார் எனவும் இந்திய அரசுடனான பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, பிரதம மந்திரி அலுவலகத்திலும் பைட்டேன்ஸ் பேசியுள்ளதாம்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com