ஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா?

ஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா?

ஆண்ட்ராய்டு வந்து எவ்வளவு நாள் ஆகுது தெரியுமா?
Published on

நம் வாழ்வின் அடிப்படை அங்கமாகி இருக்கும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில்தான் இயங்குகின்றன. இந்த ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் வந்து எவ்வளவு நாள் ஆகுது உங்களுக்கு தெரியுமா? 

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி ஆண்டிராய்டு இயங்குதளத்தின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. முதன்மையாக தொடுதிரையுடன் கூடிய செல்லிடப்பேசிக்காக உருவாக்கப்பட்ட ஒர் இயங்குதளம்தான் ஆண்ட்ராய்டு.அண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செல்லிடப்பேசி பிறகு அந்நிறுவனம் கூகுளால் வாங்கப்பட்டது. 

கூகுளால் வாங்கப்பட்டுள்ள ஆண்டிராய்டு இயங்குதளம் முதன்முதலில் HTCயின் G1 ஸ்மார்ட் போனில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. பின் தொடுதிரையின் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறவே MOTOROLA, SAMSUNG, ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து 2010ஆம் ஆண்டு முதல் பிரபலமான இயங்குதளமாக மாறியது. 10 ஆண்டுகளில் ஆண்ட்ராய்டு மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. உலகில் பயன்பாட்டில் இருக்கும் கிட்டதட்ட 88 சதவிகிதம் ஸ்மார்ட்போன்கள்தான். அதில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைதான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. ஆண்ட்ராய்டை குறிப்பிடும் பச்சை நிற பொம்மை BUGDROID என அழைக்கப்படுகிறது. இந்தப் பொம்மை 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மேலும் அனைத்து ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு இனிப்பு உணவுகளை அடிப்படையாக கொண்ட பெயர்களே சூட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆண்ட்ராய்டு HONEYCOMB 3.0 என்ற பதிப்பின் மூலம் டேப்களிலும் ஆண்டிராய்டு இயங்குதளம் செயல்பாட்டிற்கு வந்தது. 

முதன்மையாக தொடுதிரைக்கென உருவாக்கப்பட்ட ஆண்டிராய்டு இயங்குதளம் தற்போது ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் கணினியிலும் பயன்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளில் ஆண்ட்ராய்டின் மாபெரும் வளர்ச்சி அபரிமிதமானது. ஆண்டிராய்டு இயங்குதளம் நிகர் தற்போது எந்த ஒரு இயங்குதளமும் மார்கெட்டில் இல்லை என்பதே இதன் சிறப்பு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com