மத்ஸயா 6000முகநூல்
டெக்
சமுத்ரயான் | ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்றப்படும் - மத்திய அமைச்சர்
ஆழ்கடலில் இருக்கும் வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முடியுமென அவர் கூறினார்.
சமுத்ரயான் திட்டத்தின் கீழ் ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நடப்பாண்டில் நிறைவேற்றப்படுமென மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இத்திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மத்ஸயா 6000 என்ற நீர்மூழ்கி கப்பல் முதற்கட்டமாக ஆழ்கடலுக்குள் 500 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பப்படுமென அவர் கூறினார்.
இதன் செயல்பாடுகளை ஆராய்ந்து அடுத்த ஆண்டுக்குள் ஆழ்கடலில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
ஆழ்கடலில் இருக்கும் வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த முடியுமென அவர் கூறினார்.