
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழக முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோரை பற்றி வெளியிட்டப்பட்டுள்ள அவதூறான வீடியோக்களை நீக்குவதற்கு தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறை YouTube நிறுவனத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
இணைய வழி குற்றங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் அவதூறான கருத்துக்கள் உள்ளிட்டவைகளை கண்காணித்து அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
அதன்கீழ் தமிழக முதல்வர், தமிழக ஆளுநர், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றம் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் ஆகியோரைப் பற்றி அவதூறாக வெளியிடப்பட்டுள்ள 386 வீடியோக்களை கண்டுபிடித்து அவற்றை YouTube தளத்திலிருந்து நீக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் YouTube நிறுவனத்திற்கு கடிதம் வாயிலாக இன்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
அதேபோல் சட்ட விரோதமாக கூகுள் பிளே ஸ்டோரில் இயங்கி வந்த 221 கடன் செயலிகளையும் சைபர் கிரைம் காவல்துறையினர் நீக்கியுள்ளனர்.
மேலும் சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதியப்பட்டுள்ள அவதூறான 40 பதிவுகளை பிளாக் செய்திருப்பதாகவும் தமிழ்நாடு சைபர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.