“வங்கிக்கணக்கில் பணம் திருடுபோனால் இதை செய்யுங்கள்; 24 மணி நேரத்தில் மீட்டு தரப்படும்”- சைபர் கிரைம்

வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் 24 மணி நேரத்தில் மீட்டு தரப்படும் என தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.

சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலையில், தினந்தோறும் ஒவ்வொரு வங்கிக் கணக்கில் இருந்தும் ஏதோ ஒரு வகையில் பணம் திருடப்படுகின்றது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் மட்டும் 700 புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

bank
bankfreepik

இந்நிலையில் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படும்போது உடனடியாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் செய்தால் 24 மணி நேரத்தில் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒருவருடத்தில் மட்டும் 233.6 கோடி ரூபாய் மீக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணம் திருடுப்போனதற்கு பிறகு என்ன செய்யவேண்டும் என்ற வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது சைபர் கிரைம். அதன்படி பணம் திருடுபோனால், பொதுமக்கள் 1930 எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்தியில் இணைக்கப்படும் வீடியோவில் மேலும் விவரங்களை அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com