செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வது சாத்தியமில்லை: நாசா

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வது சாத்தியமில்லை: நாசா

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வது சாத்தியமில்லை: நாசா
Published on

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றம் செய்யும் நாசாவின் கனவு திட்டம் 2030-க்குள் சாத்தியமில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று செவ்வாய் கிரக பற்றிய ஆய்வுகள் இரவு பகலாக தொடர்ந்து கொண்டே வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து புதிய விண்கலத்தை அனுப்பி உள்ளன. மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருக்குமானால் அங்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசா அடியெடுத்து வைத்தது.

இந்நிலையில், நாசாவின் விண்வெளி ஆய்வு பிரிவின் தலைவர் வில்லியம் ஜெர்ஸ்டன்மையர் 2030-க்குள் மனிதர்களை செவ்வாயில் குடியேற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார். விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோனாடிக்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப முடியாது என நாசா ஒப்பு கொண்டுள்ளது. செவ்வாயில் மனிதர்களை அனுப்ப அதிக செலவு ஏற்படும் என்பதால் இத்திட்டத்தை தற்போது நிறைவேற்ற முடியாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com