செவ்வாயில் புற்றுநோய் கதிர்வீச்சு: விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாயில் புற்றுநோய் கதிர்வீச்சு: விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாயில் புற்றுநோய் கதிர்வீச்சு: விஞ்ஞானிகள் தகவல்
Published on

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய, நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய கதிர்வீச்சு அதிகம் உள்ளது என்றும் அங்கு உயிர் வாழ சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மட்டுமன்றி ஐரோப்பாவின் ஈசா மற்றும் இந்தியாவின் இஸ்ரோ ஆகிய விண்வெளி ஆய்வு மையங்களும் போட்டி போட்டுக்கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் செழிப்பாக இருந்துள்ளது. அதன்பின் விண்கல் மோதியதால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் அழிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வான்வெளியில் உள்ள கதிர் வீச்சுக்கள் நேரடியாக செவ்வாய் கிரகத்தைசென்றடைவதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பூமியை விட செவ்வாய் கிரகத்தில் 1,000 மடங்கு கதிர்வீச்சு உள்ளதால் அங்கு சென்றால் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நவேடா பல்கலைக்கழகத்திலுள்ள குழு ஒன்று விண்வெளி வீரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் இந்த உண்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com