சந்திரனின் துணைக்கோளான டைட்டன் கிரகத்தில் உயிர்கள் வாழலாம்..?!
சந்திரனின் துணைக்கோளான டைட்டன் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டைட்டன் கிரகத்தின் மேற்பகுதியில் 2010-ஆம் ஆண்டுவரை மேகமூட்டங்கள் காணப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது அதற்கு விதிவிலக்காக 5 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பில் மேகமூட்டங்கள் பரவியுள்ளதாக நாசாவின் புகைப்படங்கள் தெரிவிக்கிறது. இதனால் டைட்டனில் பருவங்கள் மாறும் சூழல் சாத்தியமாகும்.
பொதுவாக டைட்டன் கோள் அதிக குளிரான பனியுடன் கூடிய துணைக்கோள் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. மேலும் இந்த துணைக்கோளில் உயிர் வாழ்வதற்கு தேவையான நீர்வாயு மற்றும் கார்பன் அதிகளவில் இருப்பதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, மேகமூட்டங்கள் அதிகம் காணப்படுவதால் அதிக குளிரான வானிலை மாறி உயிர்கள் வாழும் தகவமைப்பு டைட்டன் கிரகத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு அடுத்து உயிர் வாழக் கூடிய கிரகமாக டைட்டன் இருக்கும் என கூறப்படுகிறது.