\
Claude AI and Riemann Hypothesis: 167-Year-Old Mystery
AI and the 167-Year-Old Riemann Hypothesis: Has Claude Made a Mathematical Breakthrough?X

167 ஆண்டுகால புதிரை உடைத்த AI? கணித உலகையே அதிர வைத்த Claude! மில்லியன் டாலர் பரிசை வெல்லுமா?

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் AI மாடலான கிளாட் (Claude) உதவியுடன், 167 ஆண்டுகளாகக் கணிதவியலாளர்களுக்கே சவாலாக இருந்த ரீமான் கருதுகோளுக்கு (Riemann Hypothesis) நிரூபணம் கண்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் கணிதவியலாளர் தெரிவித்துள்ளார்.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கணித உலகின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதப்படும் ரீமான் கருதுகோளுக்கு (Riemann Hypothesis) AI உதவியுடன் நிரூபணம் கண்டுள்ளதாக ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் கணிதவியலாளர் லெவென்ட் அல்போகே (Levent Alpöge) தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு உலகெங்கிலும் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கணிதப் பிரச்சினைக்கான தீர்வு உறுதிசெய்யப்பட்டால், உலகின் மில்லினியம் பரிசுப் பிரச்சினைகளில் ஒன்று தீர்க்கப்படுமா? விரிவாகப் பார்க்கலாம்.

Claude AI and Riemann Hypothesis: 167-Year-Old Mystery
Claude AI and Riemann Hypothesis: 167-Year-Old MysteryAI

கடந்த 1859-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்தக் கருதுகோள், 167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது. கணித உலகின் மிக முக்கியமான ஏழு மில்லினியம் பரிசுப் பிரச்சினைகளில் ஒன்றாகவும் இது இடம்பெற்றுள்ளது. இதற்குத் தீர்வு காண்பவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கணிதவியலாளர் அல்போகே, கணித வாதங்களை ஒவ்வொரு வரியாகவும் கணினிகள் சரிபார்க்க உதவும் லீன் (Lean) என்ற நிரலாக்க மொழியைப் பயன்படுத்தியுள்ளார்.

AI உருவாக்கிய இந்த நிரூபணம் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை வெளியிட்டவுடன், உலகெங்கிலும் உள்ள கணிதவியலாளர்கள் அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கணித வாதமும் சரியானதா என்பதைச் சுயாதீனமாகச் சரிபார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனக் கணிதவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Claude AI and Riemann Hypothesis: 167-Year-Old Mystery
Claude AI and Riemann Hypothesis: 167-Year-Old MysteryAI

இந்த அறிவிப்பு தொழில்நுட்ப உலகின் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் தனது பாராட்டைப் பதிவு செய்துள்ளார். எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இன்று எங்கோ யூலர், காஸ் மற்றும் ரீமான் ஆகியோர் மகிழ்ச்சியில் இருப்பார்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

கணித உலகில் மிகப்பெரிய பங்களிப்புகளைச் செய்த மூன்று கணித மேதைகளையும் நினைவுகூரும் வகையில் அவரது பதிவு அமைந்துள்ளது.

மனிதர்களால் பல ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத கணிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அளவுக்கு AI தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா என்ற கேள்வியை இந்த அறிவிப்பு எழுப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு உலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் நாளுக்கு நாள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.