’நிஜ வாழ்வில் செயற்கையான சூரியன்’.. புதிய உலக சாதனை படைத்துள்ள சீனா!
இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் அனைத்தும் சாத்தியம் என்பது பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் பழைய புராண கால பேண்டஸி படமான மாயா பஜார் போலவும், நிகழ்கால இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவான இரண்டாம் உலகம் திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவும் நிஜ வாழ்வில் செயற்கையாக சூரியன் ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கி அசத்தினர் சீன நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள். தற்போது அதை ஒளிர செய்து அசத்தியுள்ளனர்.
அதாவது சுத்தமான எனர்ஜி (Clean Energy) வேண்டி The Experimental Advanced Superconducting Tokamak (EAST) இயந்திரம் புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த EAST இயந்திரம்தான் சீனாவின் செயற்கை சூரியன் என சொல்லப்படுகிறது.
பிளாஸ்மா வெப்பநிலையில் 1,056 வினாடிகளுக்கு 70 மில்லியன் செல்சியஸில் இந்த இயந்திரம் இயங்கி உள்ளது. சூரியனை போன்ற அணுக்கரு இணைவை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த EAST இயந்திரம் இயங்குகிறது.
செயற்கை சூரியனுக்கு தேவையான மூலப்பொருட்கள் பூமியில் கிட்டத்தட்ட வரம்பற்று உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

