‘சென்னை - தி ரீடெயில் கேபிடல் ஆப் இந்தியா’ - செப்டம்பர் 3-ல் இணையவழி மாநாடு

‘சென்னை - தி ரீடெயில் கேபிடல் ஆப் இந்தியா’ - செப்டம்பர் 3-ல் இணையவழி மாநாடு
‘சென்னை - தி ரீடெயில் கேபிடல் ஆப் இந்தியா’ - செப்டம்பர் 3-ல் இணையவழி மாநாடு

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மீடியா அவுட்சோர்சிங் நிறுவனமான ஃபோர்த் டைமன்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி ‘சென்னை - தி ரீடெயில் கேபிடல் ஆப் இந்தியா’ ( CHENNAI THE RETAIL CAPITAL OF INDIA ) என்ற தலைப்பில் இணைய வழி மாநாட்டை நடத்த உள்ளது. 

முன்னதாக கடந்த ஜூலையில் “Which of the 5 South Indian states will be the first to bounce back during festive” என்ற தலைப்பில் தென்னிந்திய அளவில் இணையவழி மாநாட்டை நடத்தியிருந்தது ஃபோர்த் டைமன்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனம். 

2018 மற்றும் 2019-ல் தென்னிந்திய அளவிலான ஊடக கருத்தரங்கம், 2019 இல் கோவை நகரில் மொபைல் மற்றும் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் மதுரையில் மீடியாவின் மாறிவரும் சூழல் குறித்த கருத்தரங்கையும் இந்நிறுவனம் ஒருங்கிணைத்து உள்ளது. 

மேலும் 2020 வாக்கில் Unlocking Media in Tamil Nadu, Decoding Media in Telangana மற்றும் Decoding Mobile and Digital in South India என்ற தலைப்பில் மூன்று இணையவழி மாநாடுகளை இந்நிறுவனம் ஒருங்கிணைத்தது. 

கடந்த முறையை போலவே இந்த முறையும் வெற்றிகரமாக இந்த இணையவழி மாநாட்டை நடத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதில் ஜஸ்ட் பை சைக்கிள்ஸ் இணை நிறுவனர் மகேந்திர முல்லத் மற்றும் ஸ்பெக்ஸ்மேக்கர்ஸ் இந்தியா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் ஷா சிறப்புரையாற்ற உள்ளனர். இவர்களை தவிர மேலும் பல முக்கிய நிறுவனங்களை சார்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர். 

சவுத் ஹெல்த் ஃபுட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி முருகன், மேட்ரிமோனி.காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் அகில் ஜெயின், 88 G பிசினஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அர்ஜுன் தனஞ்செயன், மீடியா பையிங் ஜெனித் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ராம் சாய் பஞ்சபகேசன், டாக்டர் ஆர்த்தி ஸ்கேன்ஸ் இயக்குனர் - மருத்துவர் அருண்குமார் கோவிந்தராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு பேச உள்ளனர். டிவிஎஸ் யூரோகிரிப் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் நிர்வாகத் துணைத் தலைவர் மாதவன் மாடிரேட்டராக செயல்பட உள்ளார். 

“ இந்த மாநாட்டில் தற்போதைய சூழல் மற்றும் சென்னைக்கும் இடையே உள்ள பந்தம் குறித்து விரிவாக பேசப்படும்” என தெரிவித்துள்ளார் ஃபோர்த் டைமன்ஷன் மீடியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷங்கர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com