Ghibli-style
Ghibli-stylefacebook

ரீசண்ட் ரெண்டில்... ‘ Ghibli-style ‘ |விரிவாக காணலாம்!

இதில் அதிக கவனம் பெற்றிருக்கும் குரல், ஜப்பானிய அனிமேட்டரும் இயக்குநருமான Hayao Miyazaki உடையது. அது என்ன எனப் பார்க்கும் முன்பு, அவர் யார் என்ற சின்ன அறிமுகம்...
Published on

இணையத்தில் கடந்த சில தினங்களாக ஆக்கிரமித்திருக்கிறது Ghibli-style படங்கள். அவை சினிமா படங்களின் கதாபாத்திரங்கள், வைரலான மீம் புகைப்படங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள் என பலவும் Ghibli-style படமாக மாற்றப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் இந்த AI-generated animation படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது. சினிமா பிரபலங்கள் சிலர் கூட தங்களின் கதாப்பாத்திரங்களை Ghibli வடிவில் மாற்றி பதிவிடுகின்றனர். சிலர் படக்காட்சிகளை Ghibli animation வீடியோவாகவும் மாற்றுகின்றனர்.

ஒரு பக்கம் இது மிகப்பெரிய அளவில் பரவி வந்தாலும், இன்னொரு பக்கம் வலுவான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. கலை வடிவத்தை, செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமிக்கிறது என்ற அச்சம் அதில் பிரதானமாக இருக்கிறது.

இதில் அதிக கவனம் பெற்றிருக்கும் குரல், ஜப்பானிய அனிமேட்டரும் இயக்குநருமான Hayao Miyazaki உடையது. அது என்ன எனப் பார்க்கும் முன்பு, அவர் யார் என்ற சின்ன அறிமுகம்...

Hayao Miyazaki

உலகம் முழுக்க புகழ்பெற்ற மாங்கா எனப்படும் பல காமிக்ஸ்களை உருவாக்கியிருக்கிறார் Hayao Miyazaki. Princess Mononoke, Spirited Away, Howl’s Moving Castle மற்றும் The Boy and the Heron போன்ற அனிமேஷன் படங்களையும் உருவாக்கியிருக்கிறார். காமிக்ஸ் ஆனாலும், அனிமேஷன் படமானாலும் கையினால் வரைந்து உருவாக்குவதையே கலையாக மதித்திருக்கிறார் Miyazaki. 85ல் Isao Takahata உடன் இணைந்து Studio Ghibli என்ற அனிமேஷன் நிறுவனத்தையும் துவங்கினார். அந்த Studio Ghibli உருவாக்கும் அனிமேஷன் உருவங்களைப் போன்ற , இப்போது Ghibli என்ற ChatGPT AI-generated animation உருவாக்குகிறது.

For Never-Ending Man: Hayao Miyazaki

2016ம் ஆண்டு Hayao Miyazaki பற்றிய ஆவணப்படமாக வெளியானது For Never-Ending Man: Hayao Miyazaki. இந்த ஆவணப்படத்தில் AI பற்றிய சாத்தியங்களை விளக்கி சில இளைஞர்கள் வீடியோ ஒன்றை திரையிடுவார்கள்.

அதைப் பார்த்த Hayao Miyazaki கூறுவது பின்வருமாறு “என்னால் இத்தகையவற்றை பார்க்க முடியவில்லை, அவை சுவாரஸ்யமாகவும் எனக்குத் தோன்றவில்லை. இவற்றை உருவாக்குபவர்களுக்கு ஒரு போதும் வலி என்றால் என்ன எனத் தெரியாது. நான் இதனை அருவருப்பான ஒன்றாகவே எண்ணுகிறேன். இதுபோன்ற அச்சுறுத்தும் விஷயங்களை உருவாக்க விரும்பினால், நீங்கள் தாராளமாக செய்யலாம். ஆனால் நான் ஒருபோதும் என்னுடைய வேலைகளில் இவற்றை பயன்படுத்தமாட்டேன். வாழ்க்கைக்கே இது ஒரு அவமானம் என நான் மிக உறுதியாக உணர்கிறேன். நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்.” என்றார். பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலையைப் பற்றி Hayao Miyazaki கூறியிருக்கிறார் என அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் சுற்றுகின்றது.

ஒரு பக்கம் மக்களின் ஆர்வத்தால் இது போன்ற தொழில் நுட்பக் கருவிகள் வரவேற்பை பெற்றாலும், இவற்றால் யாருக்கு பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு எழாமல் இல்லை. அவற்றின் வெளிப்பாடே இந்த எதிர்குரல்களுக்கான மூலம். மேலும் ஏஐ பயன்படுத்தி இப்போது பரவலாக உருவாக்கப்படும் Ghibli ஆகட்டும், டாவின்சி வரைவது போன்ற ஓவியங்களை வரைவதோ, ஹேம்ஸ் வொர்த் போல கவிதை எழுத வைப்பதோ காப்புரிமை இல்லாமல் பயன்படுத்தப்படுவது. இந்த புரிதல் மக்கள் மத்தியிலோ, Codingஎழுதுவோர் மத்தியிலோ ஏற்படவில்லை. எனவே இப்போது எழும் எதிர் குரல்கள் தொழில்நுட்பத்துக்கு எதிரானது அல்ல, இப்படியானவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பதற்கான குரல்களே.

Ghibli-style
சீனா | உடைந்த பனிக்குடம்.. தன் தாய்க்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்! நடந்தது என்ன?

இவற்றை அறிவுசார் உடைமை என்ற வகையில் Pattend பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு பரவலாகி, அந்த நடைமுறையை எளிமையாகவும் மாற்ற வேண்டும். அதற்கான சட்டங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் விஜயகாந்த் உருவத்தை பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது, அனுமதி இன்றி எஸ்.பி.பி குரல் ஏஐ மூலமாக மறு உருவாக்கம் செய்யக்கூடாது என சொல்லப்பட்டது. ஒரு நபரின் உருவம், குரல், கலை வடிவம் எனப் பலவும் எளிமையாக இன்னொருவரால் பயன்படுத்த முடியும் என்பது எவ்வளவு பெரிய அச்சுறுத்தல். இவற்றில் பயத்தைப் போக்கவும், நெறிப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால், ”எப்படி இது தொழில்நுட்ப வளர்ச்சியோ, அதே நேரம் எதையும் செய்யும் சாத்தியம் கொண்ட  அபாயகரமான ஏஐ காலமும் கூட”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com