\
AI and Google Search help trace a missing woman's family after two-and-a-half years in Maharashtra.
AI Helps Reunite Missing Maharashtra Woman With Family After 2.5 YearsAI

குடும்பத்தைப் பிரிந்த பெண்.. ChatGPT உதவியால் கிடைத்த மறுவாழ்வு! AI செய்த அற்புதம்!

இரண்டரை ஆண்டுகளாகத் தொலைந்து போன ஒரு பெண். அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தது ChatGPT-யும் கூகுளும்! தொலைந்த உறவைத் தொழில்நுட்பம் தேடிக் கொடுத்த இந்தச் சம்பவம் தற்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
Published on: 
Summary

மனரீதியாக அழுத்தம் ஏற்பட்டு குடும்பத்திலிருந்து பிரிந்த மகாராஷ்டிரா பெண், ChatGPT மற்றும் கூகுள் தேடல் உதவியுடன் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார். AI தொழில்நுட்பம் மனிதநேயத்துடன் இணைந்து பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது.

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

காணாமல் போன மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ChatGPT உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுப் பிரிந்த ஜுலேகா முகீத் ஷேக் (Julekha Mukheed Shaikh) என்ற 45 வயதான மகாராஷ்டிரப் பெண், கூகுள் தேடல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT ஆகியவற்றின் உதவியால் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

ChatGPT and Google Help Reunite Missing Woman With Family After 2.5 Years
ChatGPT and Google Help Reunite Missing Woman With Family After 2.5 YearsAI

மகாராஷ்டிராவின் பர்பானியைச் சேர்ந்த ஜுலேகா,  மனரீதியாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறி வழிதவறிச் சென்றுள்ளார். 2024ஆம் ஆண்டு, மும்பை குர்லாவில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், சிந்துதுர்க் மாவட்டம் பாண்டுரில் உள்ள சன்விதா ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜீவன் ஆனந்த் சன்ஸ்தா அமைப்பின் அறங்காவலர் கிசான் சவுரே, அவரது குழுவினர் ஆகியோர் ஜுலேகாவின் குடும்பத்தினரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக ஜுலேகாவிடம் தொடர்ந்து ஆதரவாக பேசி அவரின் இருப்பிடம் குறித்த விவரங்களைக் கேட்ட குழுவினர், அவரது சொந்த ஊர், குடும்பப் பின்னணி குறித்த தகவல்களைச் சேகரித்தனர்.

அந்தத் தகவல்களைக் கொண்டு, கூகுள் தேடல், ChatGPT போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை அந்தக் குழுவினர் கண்டறிந்தனர். பின்னர், பர்பானி மாவட்டத்தின் நிர்பயா காவல் குழுவின் உதவியுடன் அவரது உறவினர்களைத் தொடர்புகொண்டனர்.

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசினார். நவம்பர் 9 அன்று சன்விதா ஆசிரமத்துக்குச் சென்ற ஜுலேகாவின் கணவர் முகீத் ஷேக், மனைவியைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

AI and Google Search help trace a missing woman's family after two-and-a-half years in Maharashtra.
தோழியின் ஆசைக்காக நகைகள் கொள்ளை.. காட்டிக்கொடுத்த காதலனின் டேட்டூ.. வெளியான அதிர்ச்சி!
ChatGPT and Google Help Reunite Missing Woman With Family After 2.5 Years
ChatGPT and Google Help Reunite Missing Woman With Family After 2.5 YearsAI

இதுகுறித்து ஜீவன் ஆனந்த் சன்ஸ்தா அமைப்பின் அறங்காவலர் கிசான் சவுரே கூறுகையில்:

"பொறுமையான உரையாடல்களுடன் கூகுள் தேடல் மற்றும் ChatGPT போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் இணைத்துப் பயன்படுத்தினோம். இதன் மூலம் அவரது பூர்வீகத்தைக் கண்டறிந்து, பர்பானி நிர்பயா காவல் குழுவுடன் ஒருங்கிணைந்து, நீண்ட நாட்களாகத் தவித்துக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினருடன் மீண்டும் அவரைச் சேர்க்க முடிந்தது" என்று கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உலகளவில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் சூழல் உருவாகி வருகிறது. சில AI தொழில்நுட்பங்கள் எல்லை மீறி தரவுகளை அணுகுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. AI மூலம் வேலை பறிபோகுமோ என்ற அச்சம் நிலவி வரும் இந்தக் காலகட்டத்தில், அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் ஒரு குடும்பத்தையே மீண்டும் ஒன்றிணைக்க முடிந்திருப்பது வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது!

தொழில்நுட்பமும் மனிதநேயமும் இணைந்தால் பிரிந்த குடும்பங்களையும் மீண்டும் ஒன்றிணைக்க முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

AI and Google Search help trace a missing woman's family after two-and-a-half years in Maharashtra.
நீண்ட ஆயுள்.. குரங்கு ரத்தம் மூலம் இளமையை மீட்கும் புதினின் அதிரடி முயற்சி!